ஓரு சுய பரிசோதனை --- தேர்வு பதில்கள்
தேர்வில் கலந்து கொண்ட அன்புள்ளங்களுக்கு நன்றி! நன்றி! நன்றி!
முடிவுகள் இதோ!!!
a. நீங்கள் ஆப்பிளை தேர்வு செய்திருந்தால், உங்களுக்கு ஆப்பிள் மிகவும் பிடிக்கும் என்று அர்த்தம்!
b. நீங்கள் வாழையை தேர்வு செய்திருந்தால், உங்களுக்கு வாழை மிகவும் பிடிக்கும் என்று அர்த்தம்!
c. நீங்கள் சாத்துக்குடியை தேர்வு செய்திருந்தால், உங்களுக்கு சாத்துக்குடி மிகவும் பிடிக்கும் என்று அர்த்தம்!
d. நீங்கள் திராட்சையை தேர்வு செய்திருந்தால், உங்களுக்கு திராட்சை மிகவும் பிடிக்கும் என்று அர்த்தம்!
e. நீங்கள் அன்னாசியை தேர்வு செய்திருந்தால், உங்களுக்கு அன்னாசி மிகவும் பிடிக்கும் என்று அர்த்தம்!
உங்களிடம் ஒரு பழத்தை தேர்ந்தெடுக்கத் தானே கூறினேன்! பிடிக்குமா என்று கேட்கவில்லையே ? ஆனால், ஓரு பழம் பிடித்ததால் தானே உங்களில் பலர் அதை தேர்ந்தெடுத்தீர்கள், இல்லையா ?
இதை விட சிறப்பாக உங்கள் குணாதசியத்தைப் பற்றி நீங்கள் தெளிவாக தெரிந்து கொள்ள முடியாது என நம்புகிறேன்!!! இதை பதிவு செய்தவுடன் தலைமறைவாகி விடுவேன்!
உஷா, தயவு செய்து மன்னிக்கவும்!!!
பின்குறிப்பு: தாங்கள் என்னை உதைப்பதற்காக, தீவிரமாக தேடிக் கொண்டிருந்தால், உங்களுக்கு ஒரு தகவல்!
நானும் எனக்கு இதை அனுப்பியவரை தேடிக் கொண்டு தான் இருக்கிறேன். கிடைத்தவுடன் அந்த நபரை தங்களிடம் அனுப்பி வைக்கிறேன் :-)
என்றென்றும் அன்புடன்
பாலா
8 மறுமொழிகள்:
மேற்கண்ட வலைப்பதிவாளரை, தமிழ மணத்தில் இருந்து ban செய்யுமாறு காசிக்கு வேண்டுகோள் விடுக்கிறேன் :-)
பாலா, முட்டிக்கிற ஸ்மைலி எடுத்துப் போடுங்க! உதைப்பது என்றால் பின் பாட்டு பாடிய சுரேஷ்க்கும் தான்!
உஷா
பின்னூட்டம் வழியாக வலைப்பதிவில் குண்டு போடமுடியுமா என்று எவரேனும் தெரிவிக்கவும்!! :-)
:shaking head:
:)
பாலா எத்தனை ஆவலாய் வந்தேன் முடிவை அறிய. :twisted: :evil:
பாலா.
Earlier post was on childhood,
now it was childish ;-)
(dont take it seriously )
- desikan
நீங்கள்ளாம் tired-ஆ இருப்பீக! கோவமா இருப்பீக!
மன்னியுங்கள் நண்பர்களே!
சும்மா ஒரு வெளாட்டுக்குத் தேன், செஞ்சேன் :-)
என்றென்றும் அன்புடன்
பாலா
it was quite interesting. please continue.
Post a Comment